Watermark

தொடர் மாதாந்திர தலைமை அலுவலக செலவுகள் - டிசம்பர் மாதம் 2025

தொடர் மாதாந்திர தலைமை அலுவலக செலவுகள் - டிசம்பர் மாதம் 2025
19 Days Left
18,230
இலக்கு: ₹750,000

‘பொருள் இல்லார்க்கு இல்லை இவ்வுலகம்!’ – ‘தமிழ்மறையோன்’ திருவள்ளுவப் பெருமகனார்.


‘சேமிப்பைப் புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தில் வலிமை அடைய முடியாது!’ – ஆபிரகாம் லிங்கன்


என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்!


தமிழ் மண்ணுக்கும், மக்கணுக்குமாகத் தன்னலமற்று ஒரு தூய அரசியலை முன்னெடுப்பதற்காக நாம் தமிழர் கட்சி எனும் ஒரு மாபெரும் அரசியல் படையைக் கட்டி எழுப்பி வருகிறோம். இப்பெரும்போரில் அறப்போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சியை ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைக்கப் பாடுபட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தார்மீகக் கடமையாகிறது.


அதனை நிறைவேற்றும் பொருட்டு, கருத்தியல் பரப்புரையும், களப்பணியும், மக்கள் நலப் பணிகளும் செய்து ஈடேற்றப் பொருளாதாரத் தன்னிறைவு மிக அத்தியாவசியக் காரணியாகிறது.


  • தலைமை அலுவலக நிர்வாகச் செலவுகள்
  • தலைமையகத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளுக்கானச் செலவுகள்
  • முன்னோர் நினைவுச் சுவரொட்டிகள், பதாகைகள் அச்சிடும் செலவுகள்
  • ஊடகப்பிரிவு வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள்
  • இணையதளம் மற்றும் செயலிகளுக்கான பராமரிப்பு மற்றும் சேமிப்பகக் கட்டணங்கள்

என எல்லாச் செலவினங்களையும் நம்மால் சமாளித்து, கட்சிப்பணிகளை இன்னும் வீரியமாகத் துரிதப்படுத்த முடியும். இதுக்குறித்துப் பேசுங்கள். இதற்கான இன்றியமையாத் தேவையை உணரச் செய்து, கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்க செய்யுங்கள் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த வருமானம் காக்கும் நம் இனமானம்!

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி